உலக மனநல விழிப்புணர்வு நாளை முன்னிட்டு திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” என்ற மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஷான்ஸில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பால ராஜமாணிக்கம் மற்றும் நரம்பியல் நிபுணர் மருத்துவர் வேணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி பால ராஜமாணிக்கம் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” இதழை வெளியிட்டு உரையாற்றினார். இந்த இதழில் மனநலம் உளவியல் சார்ந்த பிரச்சினைகள்,
தற்கொலையும் சமூகப் பிரச்சினையும், ஞாபக மறதி நோய், குடி நோயின் அறிகுறிகள், தூக்கமின்மையும் அதன் தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அறம் மனநல மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அனுராதா, மனநல மருத்துவர் அர்ஜூனன், உல நள சிகிச்சை நிபுணர் காயத்ரி மஹதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.