திருச்சி மாவட்டம், முசிறி முசிறி அடுத்துள்ள தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் 5வது மாநில அளவிலான குவான்கிடோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு குவான்கிடோ சங்கத்தின் மாநில தலைவர் பயிற்சியாளர் சந்துரு துவக்கி வைத்தார் .
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் வினோத், தென்காசி மாவட்ட தலைவர் கணேஷ், நாகப்பட்டினம் உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்ரமணியன், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் திருச்சி, ஈரோடு, தர்மபுரி, சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 25மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டிகள் 5-8 / 8-10/ 10-12/12-14/14-19 வயதில் அடிப்படையிலும் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட வீர – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை திருவாரூர் மாவட்ட அணி பெற்றது. இன்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹரியானா மாநிலம் சண்டிகாரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.