உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதன் படி திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதலே குழந்தைகள் பெரியவர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து இந்த தீபாவளி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.