தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒருபகுதியாக திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்..
அதில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவிட தான், இந்தியாவிலேயே முதன்முதலாக கடந்த 1904 ஆம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் மிக முக்கியமான துறை தான் இந்த கூட்டுறவு, இங்குள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும், உழைப்பும், தான் தமிழ்நாடு முதலமைச்சரின் 2030-ல் நாம் அமெரிக்க டாலரில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அமைக்க முடியும். கூட்டுறவு சங்கங்கள் தான் இன்று பலரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளது. அதிலும் சுயஉதவி மகளீர் குழுக்களுக்கான கடன் உதவி தொகையை 12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார்.
அதேபோல் கூட்டுறவு துறைக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிட வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து, தனி அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கு இடையே இருக்கின்ற இணைப்பு பாலம் கூட்டுறவு துறை தான், எங்களுக்கு தபால்காரர்களே நீங்களே தான், எனவே இந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நீங்கள் வழங்கிய கடன்களை வசூலிக்காத நிலையில், உயர் அதிகாரிகளிடம் இருந்து கடுமையான வார்த்தைகள் வரும் இருப்பினும் அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் அல்ல நீங்களும் விருதுகளை பெற வேண்டும் என்பதற்காக தான், ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் தமிழக முதல்வர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நம்முடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..