திருச்சி மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்களை அமர வைத்து
படிக்க வைத்தல் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்கின்ற கருத்துருவில் தேனீரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் பள்ளி மாணவ மாணவர்களை தமிழ் மற்றும் தமிழ் எழுத்துக்களில் அமர வைத்து புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர் ரகுபதி வடிவமைத்துள்ளார். பள்ளி மாணவ மாணவிகள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக பங்கேற்றதோடு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கவும் படிக்கவும் உறுதி மேற்கொண்டனர்