அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிலையில், ஏர்போர்ட் பகுதி கழக 65 வது வார்டை சார்ந்த, பூத் கமிட்டி பொறுப்பாளர் லெட்சுமணனின் திருமணம் இன்று சமயபுரம் கோவிலில் நடைபெற்றது.இன்று பூத் கமிட்டி கூட்டம் என்பதால், லட்சுமணன் – பக்தமீரா புதுமண தம்பதியர், திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு நேரடியாக வந்து கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புதுமண தம்பதியினருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்தி, குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேருமான சீனிவாசன் சீறிய முயற்சியால், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாநகர பூத் கமிட்டி குறித்து, வீதி வீதியாக, வார்டு வார்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர், திருமணம் முடிந்த கையோடு, பொறுப்பாக, திருமண கோலத்தில் மணப்பெண்ணுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொறியாளர் இப்ராம்ஷா, பொன்னர், கவுன்சிலர் அம்பிகாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.