திருச்சி உறையூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக திருச்சியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திருச்சி வருகை தந்துள்ளார்.
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த வேலூர் இப்ராஹிம் . ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு செல்லக்கூடாது என கூறி காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர். தடையை மீறி RSS ஊர்வலத்திற்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தி பாஜக அலுவலகம் முன்பு கைது செய்தனர். இதனால் பாஜக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது