திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சம்பவம் குறித்து கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறுகையில் :- என்கவுண்டரில் ஜெகன் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு பழி வாங்கப்பட்ட ஒரு செயல் இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போதெல்லாம் இதுபோன்று கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர் என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளார். என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜெகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவே காவல்துறையினர் மனித உரிமை மீறலை கையில் எடுத்துள்ளனர்.
எனவே நாங்கள் நீதிமன்றம் மூலமும் மனித உரிமை ஆணையம் மூலமும் திருச்சி எஸ் பி வருண் குமார் மீது வழக்கு தொடருவோம்.ஜெகன் பல குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் காவல்துறை அந்த குற்றங்கள் மீது தண்டனை பெற்று தராமல் சுட்டுக் கொள்வது என்பது ஏதோ ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்யப்பட்ட கொலையாக இது தெரிகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு முட்டை ரவி என்ற எங்களுடைய சமூகத்தை சேர்ந்த நபரை இதே போல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் என்கவுண்டர் செய்தனர் மீண்டும் இரண்டாவது முறையாக ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் இது திராவிட முன்னேற்ற கழகம் தேவர்களுக்கு எதிராக செயல்படுவதை காட்டுகிறது.
மற்ற சமூகங்களில் இது போன்ற குற்றவாளிகள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது பலர் தண்டனையில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்குள் இருக்கின்றனர் அப்படி இருக்கும் நிலையில் ஜெகனை மட்டும் என்கவுண்டர் செய்ய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். எனவே இந்த என்கவுண்டரை நாங்கள் சாதாரணமாக விடப் போவதில்லை பல கட்ட சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என தெரிவித்தார்.