திருச்சி மாநகராட்சியின் 5 -வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல்செயிண்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் , சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு , சவேரியார் கோவில் தெரு , மீன்கார தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் தெரு ,ஜெனரல் பஜார், பென்சினர்,விஷப்பன் நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம் தெரு, முலைக் கொல்லை, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் கொடுத்தனர். இதில் பொதுமக்கள் அளித்த 31 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதி அளித்தார்..
இதேபோல் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மக்கள் மன்ற வளாகத்தில் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கோ அபிஷேகபுரம் கோட்டத் தலைவருமான விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்..