பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. :-பாஜக மிகப்பெரிய எழுச்சி இயக்கமாக மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். இன்றைக்கு அரசியலில் ஊழல் இருப்பதை ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை பெரு முயற்சி செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு இருந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் ஊழலை எதிர்க்க தொடங்கிவிட்டனர்.. தமிழகத்தில் தூய்மையான ஆட்சி,ஊழலற்ற ஆட்சி வரவேண்டும் என்றுதான் அண்ணலை விரும்புகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து உள்ளது. ஊழல் செய்து வந்த காங்கிரசுடன் திமுகவும் கைகோர்த்துள்ளது. இன்றைக்கும் இரு கட்சிகளும் ஊழலில் ஊறிப் போய் உள்ளது. இந்த இரண்டு கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் செயல்பாட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் தான் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் பாஜகவுக்கு கொடுத்துள்ளார்கள்.
வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 தமிழக அரசு நிதி கொடுத்து உள்ளது. அது பொது மக்களுக்கு போதாது. ரூ பத்தாயிரம் ஆக உயர்த்தி தரவேண்டும். அதே சமயத்தில் பணம் ஒரு பெரிய விஷயம் இல்லை வெள்ளம் பாதித்த போது மக்களை சந்தித்து பேசி அவர்களின் துயரத்தை நீக்க திமுக அரசு முயற்சி செய்யவில்லை. இதனால் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்..பேட்டியின் போது திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் புரட்சிகவிதாசன் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் ஒண்டி முத்து, பொன் தண்டபாணி, காளீஸ்வரன்,ஊடகப் பிரிவு முரளி, ஜெயந்தி, சதிஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.