திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக் கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார சட்டத்தை மீறி வெண்டிங் கமிட்டி அமைக்காமல் தரைக் கடைகளை அப்புறப்படுத்துவது, மாநகராட்சியின் அடையாள அட்டை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, ஏர்போர்ட், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் தரைக்கடை நடத்துபவர்களை விரட்ட முயற்சிக்கும்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தரைக் கடை வியாபாரிகளுக்கு உடனே அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் சி ஐ டி யு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க செயலாளர் செல்வி, பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர் போராட்டத்தில் நிர்வாகிகள் கோபால் மணிகண்டன் ஷேக் மொய்தீன் ரத்தினம் அப்துல்லா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.