திருச்சி இன்னர் வீல் கிளப் மற்றும் பிஷப்ஹூபர் கல்லூரியின் இளைஞர்களுக்கு எதிரான போதை இயக்கம் ஆகியவை இணைந்துநோ டு டிரக்ஸ் சென்ற விழிப்புணர்வு மணிதசங்கிலி நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி இன்னர் வீல் கிளப் தலைவி ஷோபனா மகேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி வடக்கு சரக காவல்துறை துணை ஆணையர் அன்பு மனித சங்கிலி நிகழ்வை துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, சிவானி கல்லூரி, தேசியக் கல்லூரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் போதையை தவிர்ப்போம் என்று விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலியாக நின்றனர்.
தொடர்ந்து செய்தியளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை துணை ஆணையர் அன்பு கூறுகையில்:- இன்று இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கை இழந்து வருகின்றனர். நிகழ்ச்சி நடத்துபவர்கள் தாய் ஸ்தானத்தில் இருந்து அறிவுரை சொன்னால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் இந்த முயற்சிகளை பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்த வேண்டும் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசும், காவல்துறையும் கல்லூரி மற்றும் பள்ளி சுற்றுவட்டாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தும், கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது போன்ற தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால் இந்த போதை பொருட்களை வேரோடு ஒழித்து விடலாம் இளைஞர்களை காப்பாற்றி விடலாம். மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். என தெரிவித்தார். இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் சேர்மன் மாலதி, கோ சேர்மன் லதா மனோகரன் , சாந்தி ரவி, டாக்டர் மீனா ஜெயசுதா, வனிதா, மதுமிதா மற்றும் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.