தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து அங்கும் மழை வெள்ளத்தின் பாதிப்பு அதிகமானது.
மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்றவும் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பணிகள் முன்புறமாக நடைபெற்று தற்போது இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து திருச்சி மாவட்டத்தில் பணி பொழிவுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக குளிர்காலமான டிசம்பர் ஜனவரி ஆகிய மாதங்களில் பணி பொழிவு பெய்யுமா, ஆனால் இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தை மூடியது போல் பணி மழை பொழிவு அதிகமாக காணப்பட்டது. இந்த பணி மழை பொழிவில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ரெயின் கோட் அணிந்து வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.