தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் தலைவர் குமார் தலமைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஆட்சிக்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : புதிய ஓய்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அதனை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மாதம் பொது கலந்தாய்வு நடைபெற்றது போல 164 கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்
அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் 25000 லிருந்து 50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.