தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாக தமிழக அரசு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது இதை தொடர்ந்து எங்களுடைய அமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம் இதை எடுத்து தமிழக அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்கள்.
ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை எனவே எங்களுடைய அமைப்பு சார்பில் நாளை 27ஆம் தேதி புதன்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வகை சிறு குரு தொழில் முனைவோர்களும் தொழிலாளர்களும் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் திருச்சியில் அரியமங்கலம் முதல் கணேசபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.எங்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கும் நிலைக்கட்டுணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் மண் கட்டணத்தை உயர்த்த கூடாது பீகார்ஸ் 15 கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் சோலார் கான கட்டணத்தை முழுமையாக திரும்ப வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்