சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த மறியல் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜவேல் கூறுகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் 61வது போராட்டமாக மாநில அளவில் இந்த மறியல் போராட்டம் இன்று நடைபெற்ற வருகிறது.
கடந்த 20 ஆண்டு காலமாக இந்திய சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம் அரசு ஊழியர்களின் மூன்று நாள் ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் பிடித்த வைத்துக் கொண்டு அதை செலுத்தாமல் இருப்பது மிகப்பெரிய பாதிப்பை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்துகிறது எனவே இந்த புதிய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இந்தப் போராட்டத்திற்கும் தமிழக அரசு மவுனம் சாதித்தால் அடுத்த கட்டமாக வருகின்ற ஜனவரி 27 28 ஆகிய இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும். பிப்ரவரி 8ஆம் தேதி அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வரின் வீடு நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.