திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அருகில் கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன், மகளிர் அணி நிர்வாகி ஷீலா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர் எம்பி கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய இரண்டாம் கட்ட நடை பயணத்தை வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்குகிறார். அவரின் முதல் பயணம் இமாலய வெற்றி பெற்றது. அதே போல இரண்டாவது பயணமும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும், காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்த நடைபயணம் எளிதாக்கும். அந்த நடைபயணம் வெற்றி பெற தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 பேரை விடுதலை செய்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தான் அவர்களின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விமான நிலைய திறப்பு விழா முழுமையாக அரசு விழாவாக நடைபெறவில்லை. அந்த விழாவில் அரசியல் கலப்பு இருந்தது. அதனால் தான் அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது என்றார்.