பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆற்றில் கட்லா, ரோகு, மிர்கால், கல்பாசு போன்ற நாட்டு இன மீன் குஞ்சிகளை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முக்கொம்பு மேலணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்புள்ள நாட்டு இன மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, கல்பாசு, மிர்கால் போன்ற நாட்டு வகை மீன்களை ஆற்றில் விடும் நிகழ்ச்சி முக்கொம்பு மேலனை பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நாட்டு இன மீன் குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக ஆற்றில் விட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், பழனிச்சாமி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.