திருச்சி கல்லுக்குழி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மார்கழி 26 ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு அனுமந் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வடமாலை ஜாங்கிரி மாலை நெய்வேத்தியம் பிரசாதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் ஆஞ்சிநேயர் கற்பக விருட்சம் என்பதால் பக்தர்கள் என்ன நினைத்து இன்று வேண்டுதல் செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கும் குறிப்பாக இன்று உலக நன்மைக்காகவும், நோய் நொடி இல்லா வாழ்கை பெறவும், மாணவ மாணவிகளின் கல்வி அறிவு பெருகவும், தொழில் விருத்தி அடையவும், குழந்தை பாக்கியம் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும் உள்ளிட்ட காரணங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்ய நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று தரிசனம் செய்தனர். மேலும் அனுமன் ஜெயந்தி விழாவில் காண ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.