திருச்சி குண்டூரில் ஜேகேசி அறக்கட்டளை, உலகத் தமிழ் திருக்குறள் பேரவை, தமிழ்நாடு தேவர் பேரவை மற்றும் முத்தரையர் முன்னேற்ற பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. குண்டூர் கிராம தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். இன்ஜினியர் சுரேஷ், செல்வராஜ், முத்தரையர் முன்னேற்ற பேரவை செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தேவர் பேரவை தலைவரும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவருமாகிய டாக்டர் சுப்பையா பாண்டியன், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் டாக்டர் சையத் ஜாஹிர் ஹசன், முத்தரையர் இலக்கிய வட்ட செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், ஆசிரியர் நடராஜன், இன்ஜினியர் சாமுகவேல், விக்னேஷ் மற்றும் சிவரஞ்சனி, திருச்சி கிராமாலயா பத்மஸ்ரீ தாமோதரன், டாக்டர். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஜே கே சி மகளிர் பிரிவு தலைவி சகுந்தலா சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த விழாவில் பொதுமக்கள் அனைவருக்கும் வேட்டி சேலை கைலி மற்றும் பொங்கல் கரும்பு போன்றவை வழங்கப்பட்டது.
அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் சார்பில் டாக்டர் சுப்பையா பாண்டியன் இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தி அனைத்து பொதுமக்களுக்கும் சளி, இருமல், சத்து குறைவு, மேலும் டெங்கு காய்ச்சல் மலேரியா காய்ச்சல் போன்றவற்றிற்காக கபசர குடிநீர் வழங்கினார். இதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் இளைஞர் நற்பணி மன்றத்தினரும் செய்து இருந்தனர்.