வருகிற ஜனவரி 30 ஆம் தேதி அன்று மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு பொது மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கென்னடி தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 தேதி மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார். அந்த நாள் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளையும் விடுதலைக்குப் பிறகு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட காந்தியடிகளையும் அந்நாளில் நாம் நினைவுகூர்ந்து வருகிறோம். எனவே வருகிற ஜனவரி 30 ஆம் தேதி மத வெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்ய வேண்டியும் மேலும் உறுதி மொழியை பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு வழி வகுக்க வேண்டும் என தமிழ்நாடு பொது மேடை சார்பாக கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளிக்கப்பட்டது.