தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 23 24 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் சார்பில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட கோரியும், கேரள மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட கோரியும்,
உதவி மேலாளர் பதவி உயர்வில் மூன்றுக்கு ஒன்று நடைமுறையை ரத்து செய்திடக் கோரியும் , மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான டி ஏ மற்றும் எப்டிஏ யில் 100% உயர்வு வழங்க கோருவது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கௌரவத் தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரகுராமன் தலைவர் துறை பொருளாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.