திருச்சி சலேசிய மாநில வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வண்ணாங்கோவில் தொன் போஸ்கோ ஐடிஐ வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியை தொழிலதிபர் கே என் அருண் நேரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக தொன் போஸ்கோ ஐடிஐ முதல்வர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் வரவேற்புரை ஆற்றிட தாளாளர் மற்றும் இல்ல தந்தை அருட்பணி ஜான் கென்னடி ஆசியுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கபடி வீரர்களுக்கு தொழிலதிபர் கே.என்.அருண் நேரு வாழ்த்துக்கள் கூறி சிறப்பு உரையாற்றினார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 மாவட்டங்களை சேர்ந்த 37 கபடி அணி வீரர்கள் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூபாய் 51000, இரண்டாம் பரிசு ரூபாய் 41000 மூன்றாம் பரிசு ரூபாய் 31000, நான்காம் பரிசு 11000, மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் திமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா, நிர்வாகி மணியம் தேவராஜ், இல்ல பொருளாளர் அருட்பணி கிறிஸ்டோபர், உதவி பங்கு தந்தை அருட்ப பணி சார்லஸ், கவுன்சிலர்கள் டேவிட், சண்முகம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.