தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் முனைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஞானசேகரன் வரவேற்புரையாற்றினார் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் முனைவர் மனோகரன், மாநில துணைத்தலைவர் முனைவர் முகமது ரியாஸ் இக்பால், மாநிலத் துணைத் தலைவர் முனைவர் ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக கடந்த 1996 முதல் ஆசிரியருக்கெல்லாம் உயர் துவக்க ஊதியமாக ரூ 14940 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பல பேருக்கு வழங்கப்படவில்லை.. குறிப்பாக தனியார் கல்லூரி ஆசிரியருக்கெல்லாம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல் எங்களுடைய ஊதிய திருத்தத்தில் மத்திய அரசு புதிதாக ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் எங்களுடைய ஓய்வூதி திருத்தம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். அடுத்த மாதம் அகில இந்திய அளவில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளோம். அது தொடர்பாக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் சுவாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக எங்களுடைய உறுப்பினர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதன்மூலம் தற்போது வரை ரூபாய் 15 லட்சம் கலெக்ட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக நிதி பெறப்பட்டு அதனை நிறைவு செய்து தமிழக முதல்வரிடம் நேரடியாக வழங்குவதற்காக கல்வி அமைச்சரிடம் சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.