திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது மேலும் மாநகராட்சியில் தெருகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணிகளையும் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைப்பது பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி, ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்