திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்திமார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 21 செல்போன்களும்,
கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 11 செல்போன்களும், பொன்மலை சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 10 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் உட்பட 25 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளின் 153 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து இன்று காலை திருச்சி மாநகரம் கேகேநகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் செல்போன் பறிகொடுத்த உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார்.