திருச்சி ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியின் பள்ளி ஆண்டு விழா, ஊர் கூடி திருவிழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் சைவராஜ் வரவேற்பு ரையாற்றினார். பொருளாளர் கிரி விழாவிற்கு தலைமை தாங்கினார். அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் அசோகன் சிறப்புரை ஆற்றினார் திருச்சி கைப்பந்து கழக தலைவர் தங்க பிச்சையப்பா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளியின் செயலர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் முன்னாள் மாணவர் அரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் லால்குடி அரங்கத் திருவிழா வளவன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமா தன்னார்வலர் செல்வி சரண்யா பத்மாவதி செயலர் வெங்கடேசன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் விழாவில் இறுதியாக ஒருங்கிணைப்பு சாந்தினி கௌரி ஆகியோ நன்றியுரை ஆற்றினர்.
முன்னதாக மரம் நடும் விழா 50 மரக்கன்றுகள் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளும் விளையாட்டு திடலில் வெளிப்பகுதியிலும் பள்ளியின் நிர்வாக குழு செயலர் கஸ்தூரி ரங்கன் மற்றும் டாக்டர் அசோகன் டாக்டர் தங்க பிச்சை சைவராஜ் அரங்கத் திருமாவளவன் வரதராஜன் முன்னாள் கவுன்சிலர் ரங்கன் காங்கிரஸ் கோட்டத் தலைவர் ஜெயம் கோபி பொருளாளர் கிரி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.