திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த சிறுதானிய உணவு திருவிழாவை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பலூன்களை வானில் பறக்க விட்டார்.
இந்த சிறுதானிய உணவுக் கண்காட்சியில், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம். குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களைப் பற்றி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுதானியத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும்
சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 கொண்டாடும் வகையிலும் பள்ளி, கல்லூரி, அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்களால் சிறுதானிய அரங்குகளையும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுதானியத் திருவிழாவில் சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கண்காட்சி அரங்கினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டார். இந்த விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகள் சமைக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்கள்.