தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில நிர்வாகி வைத்தியநாதன் வரவேற்பு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழுவிடம் வழங்க உள்ள கோரிக்கை அடங்கிய பட்டியலை மாநிலத் தலைவர் பாண்டியன் வெளியிட மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- பாரதியார் கிஷான் சங்கத்தில் ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும் வாரும் தேர்தலில் அனைத்து விவசாயிகளும் வாக்குகள் செலுத்த செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கோரிக்கைகளாக:- பிரதம மந்திரி சம்மான்நிதி தற்போது ரூபாய் 6 ஆயிரம் உள்ளது அதனை 12000/- மாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க கோரியும், எம் எஸ் பி க்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்க கோரியும், விவசாயம் சார்ந்த பொருட்களுக்கான ஜி எஸ் டி ரத்து செய்ய கோரியும், மரபுசாரா எரிசக்தியில் சூரிய சக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் தரவும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க கோரியும் மேலும் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.