திருச்சி சென்னை பைபாஸ் ரோடு செந்தின்னிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் மூலம் கேட் (KAT), தேர்வில் பங்கேற்று பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேக்ஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக தனியார் ஒலிம்பிக் நிறுவனம் சார்பில் அகில இந்திய அளவில் நடந்த கேட் (KAT) தேர்வில் திருச்சி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 127 மாணவ மாணவிகள் முதல் சுற்றில் பங்கேற்றனர். இந்த தேர்தலில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் இரண்டாவது சுற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற 122 மாணவ மாணவிகள் கேஷ் அவார்டு 32000 பணமும், மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி மேலாளர் சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றிட பள்ளி பள்ளி முதல்வர் சோபியா தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக தந்தை பெரியார் ஈவேரா கல்லூரி பேராசிரியர் செந்தில் குமார் கலந்துகொண்டு கேட் (KAT) தேர்வில் மெடல் மற்றும் சான்றிதழ் பெற்ற 122 மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் கூறிய பாராட்டு தெரிவிக்கப்பட்டது.