திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த கண்காட்சிக்கு திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார்.
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளான மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு குறித்தும் உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் அதன் பயன்கள் குறித்தும் நவீன முறையில் விவசாயம் செய்வது குறித்தும் விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்தும்
மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை தயாரிப்பு உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொள்வது குறித்தும் நவீன இயந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை பீம நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் படைப்புகள் இந்த அறிவியல் கண்காட்சி இடம் பெற்றது.
முன்னதாக இந்த அறிவியல் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி கல்வி மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் முகமது பாரூக். வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் காஜாமைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிராஜுதீன் செய்திருந்தார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.