திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 14 வட்டாரங்கள் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது மேலும் வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பாக, ஒருநாள் கருத்தரங்கம் திருச்சி கோர்ட்யார்ட் ஹோட்டலில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒருநாள் கருத்தரங்கில் ஸ்டேட் பிளானிங் கமிஷன் செயலாளர் சுதா வரவேற்புரை ஆற்றிட. கமிஷன் உறுப்பினர்கள் சீனிவாசன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கருத்தரங்கில் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டாக்டர் அசிட் குமார் மற்றும் திண்டுக்கல் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 9 மாவட்டங்களை சேர்ந்த முதல்நிலை அலுவலர்களுக்கு மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்களுக்கு- செயலர் மற்றும் உறுப்பினர்களால் பயிற்சி அளிகாகப்பட்டது.