14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி திருச்சி குமர வயலூர் கோவில் முன்பாக தொடங்கியது.
இந்த விழிப்புணர்வு பேரணியை குமர வயலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலன் தொடங்கி வைத்தார் அருகில் பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் பால் அஜித்குமார் முனைவர் சுகுமார் பவுல்ராஜ் முனைவர் அன்னாள் எழில் செல்வி முனைவர் ஜூனோ முனைவர் நெல்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியானது குமர வயலூர் கோவில் முன்பாக துவங்கி கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக பாரதி நகர் பகுதி வரை சென்று நிறைவடைந்தது இந்த விழிப்புணர்வு பேரணியின் முக்கிய நோக்கமாக இளம் வாக்காளர்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து முழு ஆர்வத்தோடு தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிப்பது 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதி செய்வது போன்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவ மாணவிகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பிஷப் பிரிப்பர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஆகியவை இணைந்து திருச்சி குமரவாயலூர் அதவத்தூர் சோமநாதசம் பேட்டை குறிஞ்சி நகர் பாரதி நகர் கொத்தட்டை ஆகிய பகுதிகளில் தூய்மையை பேணி காப்பது என்ற தலைப்பில் சிறப்பு முகாம் கடந்த 28ஆம் தேதி தொடங்கி வருகிற மார்ச் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது.