திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல் 2024வரை 35 ஆண்டுகளாக சமூக சேவகர், சமூக ஆர்வலர் மற்றும் பேச்சாளர், வரலாற்று நூல் ஆய்வாளர், மருத்துவர், போதகர், பாடகர், பத்திரிக்கையாளர், நூல் ஆசிரியர், தமிழறிஞர், சட்டத் தன்னார்வலர் போன்ற பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து 35 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். மேலும் காவல்துறையுடன் இணைந்து 25 ஆண்டுகள் தன்னார்வ தொண்டாற்றியுள்ளார்.
அது மட்டுமல்ல, மழை வெள்ளம் சேதங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு நல திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் ரோட்டோர வாசிகளுக்கு உணவு உடை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை அவர் செய்து வருகிறார். இதுவரை 150 வரலாற்று நூல் ஆய்வுகளை செய்துள்ளார். அது மட்டுமல்ல சித்த மருத்துவ துறையில் 25 ஆண்டுகள் மேலாக தன்னை இணைத்துக் கொண்டு கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் சென்று தனது கட்டுரை சமர்ப்பித்தல், கருத்துரை வழங்குதல் பணிகளை செய்து வருகிறார்.
இவருடைய சேவை என்பது பல்வேறு தரப்பட்ட மக்களாலும் வரவேற்கப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது. நூற்றுக்கும் அதிகமான சான்றிதழ்கள் விருதுகளை பெற்றிருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் துறை சார்ந்த விருதுகளையும், காவல்துறையில் சுமார் 10 விருதுகள் காவல்துறை உயர் அதிகாரிகளின் திருக்கரங்களாலும் பெற்றிருக்கிறார். அதைப்போல திருச்சியில் இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளிலே நிர்வகித்து வருகிறார். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் னுடைய தேசிய இணை பொது செயலாளராகவும், மாற்றுமுறை மருத்துவ அக்கடாமினுடைய தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலுடைய இணைச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். மேலும் ஊழல் ஒழிப்போர் கூட்ட அமைப்பினுடைய மாநில தலைமை நிர்வாகியாக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மூலமாக சுமார் கால் நூற்றாண்டுகளில் எண்ணற்ற நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். சமூக சமய நல்லிணக்கத்தை வலியுறுத்து வகையில் ஆண்டுதோறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடத்தி அதன் மூலமாக சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிறார். அதிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் விருதுகளை சான்றுகளை வழங்கி வருகிறார்கள். இது போன்ற சேவையை மட்டுமல்லாமல் ஆன்மீக துறையில் கிறிஸ்தவ போதர்கள் சுமார் 3500 பேரை 25 ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் நிருவி வருகிறார். இது இல்லாமல் 16 மாநிலங்களில் அவர்களுடைய ஆன்மிக சமூகப் பணிகள் விரிவடைந்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் ஏழை குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் அன்று ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அளித்தல் நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் பல்வேறு திட்டங்கள் செயலாற்றி வரக்கூடிய திருச்சி அறக்கட்டளை பேராயத் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவருடைய சேவை தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.