பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா -2023-2024 திருச்சி கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாநில அளவிலான விருதுகள் வழங்கி பேருரை ஆற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..,தமிழகத்தில் முதல்முறையாக தமிழக முதல்வர் ஆணைக்கு இணங்க அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா துவங்கி உள்ளோம். சிறந்த பேராசிரியர்கள் சிறந்த பள்ளிக் கூடங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த 76 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழாவை பார்க்கும் மற்ற பள்ளிக்கூடங்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தாமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஏற்கனவே அறிவித்திருந்த தேதிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். மற்ற பள்ளிகளுக்கு விரைவாக நடத்தி முடிக்கப்படும். பாட புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டத்தைமத்திய அரசு கொண்டுவரும் நிலையில் தமிழகத்தில் அதை செயல்படுத்துவதற்கு எந்த யோசனையும் இல்லை. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக்கு கூறினார்