சுரபி அறக்கட்டளை சார்பில் மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தின விழா திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுரபி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார் விழாவினை செல்வி ராமநாதன் ராஜேஸ்வரி சுரேஷ் மற்றும் கீதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த உலக பெண்கள் தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கலட்சுமி தசரதன் மற்றும் பிரண்ட் லைன் கார்ப்பரேட் மேனேஜர் மற்றும் ட்ரான்ஸ்பிளான்ட் ஒருங்கிணைப்பாளர் கீதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணி மேற்கொள்ளும் போது எவ்வாறு தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதனை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், தூய்மை பணியாளர் ஆகிய பெண்கள் வீட்டில் தூண் என்பதால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து துப்புரவு பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியாக சுரபி அறக்கட்டளை மாநில துணை பொதுச்செயலாளர் வினோத் நன்றியுரை ஆற்றினார்.