திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் முனைவர் ஜெயந்தி ரவி கலந்து கொண்டு 1 தங்கப்பதக்கமும் 17 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்றவர்கள் உள்ளிட்ட 1218 மாணவர்களுக்குப் பட்டச்சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தொடங்கப்பட்ட நம் கல்லூரியின் நிறுவனரை வணங்கி உரையைத் தொடங்கினார்.உலகளவில் ஆசியா கண்டம் பெருமைபெற்றது. அதிலும் நம் பாரத பூமியானது மிகவும் உயர்ந்தது ஏனெனில் நம் பாரதத்தில் விலைமதிக்கமுடியாத உயரிய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம் முன்னோர்கள் மேற்கொண்டிருக்கிறர்கள்.ஆன்மிகச் சிந்தனைகள் பெருமளவில் காணப்படுவதால் உலக உயிர்கள் அனைத்தும் ஒன்று எனக் கருதும் மனப்பாங்கு நம்மிடத்தில் காணப்படுகிறது.
மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும். போட்டி,பொறாமை,பேராசை போன்றவற்றை அகற்றும் போது மனம் தெளிவடைந்து பலம் பெருகுகிறது, என்பதையும் எடுத்துக்கூறி ஆகஸ்டு 15 ஆம் நாள் அரபிந்தோ பிறந்தநாள் என்பதையும் நினைவுப்படுத்தி அவரின் கூற்றை எடுத்துரைத்தார்.நம் கல்லூரியின் குறிக்கோளான (TOGETHER WE WILL WE CAN) அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நம் கல்லூரி செயல்பட்டு வெற்றியடைந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இளம் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் விழாவில் மூத்த துணைமுதல்வர் முனைவர் ஜோதி, மற்றும் துணைமுதல்வர்கள் முனைவர் கிருஷ்ணன், முனைவர் பேந்திரன், தேரு நெறியாளர் முனைவர் .வித்யா புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.