திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி மாமன்ற உறுப்பினராக உள்ள செந்தில்நாதன் அறிவிக்கப் பட்டிருந்தார். இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் நிர்வாகிகள் சாருபால தொண்டைமான், மற்றும் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் :- கடந்த 20 ஆண்டுகளாக திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினரை யாரையும் பார்க்கவில்லை,அந்த குறையை போக்குவதற்காக நான் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளேன்களம் இறக்கப்பட்டுள்ளேன் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுவேன்.. திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த கேள்விக்கு? எம்பி ஆக வெற்றி பெற போகிறேன், எதற்காக எனக்கு அந்த பதவி நான் நம்பிக்கையுடன் உள்ளேன்நான் நம்பிக்கையுடன் உள்ளேன் அதனால் தான் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தேன். திமுக ஆட்சிக்கு வருவதற்கு பிரசாந்த் கிஷோர் தேவைப்பட்டார். எங்கள் வேட்பாளர்கள் எல்லாம் மண்ணின் மைந்தர்கள் தான். மேலும், படித்தவர்கள், இளையவர்கள், புதியவர்கள் எனவே அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்
எனது வார்டு மக்கள் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்து உள்ள நிலையில நான் ராஜினாமா செய்திருப்பது எனக்கு வருத்தம் தான். ஆனால் என்னுடைய எல்லையை விரிவாக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வருவார். திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு மட்டுமே போட்டி என எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளது குறித்து கேள்விக்கு? 5வருடத்திற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், பிரதமர் மோடி பற்றியும் என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். இன்றைக்கு, நாளைக்கு என ஒரு நிலைப்பாடாக கூட மாற்றிப் பேசுவார் பேசுவதை ஒன்றும் பெரிது படுத்த தேவையில்லை என தெரிவித்தார்.