திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேட்பாளர் ராஜேஷ்:- நாங்கள் வெற்றியை தீர்மானித்து தான் களத்திற்கு வந்துள்ளோம். மக்களுடைய ஆதரவு இருக்கிறது. கடந்த 15 வருடங்களாக திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து வருகிறோம். ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட உய்யகொண்டான் சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்குசுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு. வாய்க்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். துவாக்குடி பால் பண்ணை சர்வீஸ் சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த சாலையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை பகுதியில் முந்திரி தொழிலை மேம்படுத்தும் வகையில் உலக அளவில் அதற்கான புவிசார் குறியீடு பெற்று பதப்படுத்தும் தொழிற்சாலை ஏற்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
சோமரசம்பேட்டை, அல்லித்துறை, வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் பூக்களின் உளைச்சல் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாநகரத்தில் கட்டமைப்பு மற்றும் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மக்கள் என்னை வெற்றி பெற செய்தால் உலக அளவில் திருச்சி பாராளுமன்ற தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக கொண்டு வருவேன். உங்களுக்கான சின்னம் ஒதுக்கப் படவில்லையே என்ற கேள்விக்கு? சின்னம் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கினால் கூட அந்த சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.. எங்களைப் பொறுத்தவரை சீமான் தான் சின்னம், அடையாளம். அதனை வைத்தே நாங்கள் பயணித்து வருகிறோம்.மைக் சின்னம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை விட சிறந்த சின்னத்தை பரிசீலனை செய்து கேட்டு உள்ளோம் நாளை அந்த சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம்.
திருச்சியில் நான்குமுனை போட்டி உள்ளது அதில் வேட்பாளர்கள் அனைவருமே வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? அதை நான் உடைப்பேன். மக்கள் மத்தியில் அதுவும் பேசும் பொருளாக உள்ளது அதை நான் நிச்சயம் மாற்றி காட்டுவேன். நான் பிறந்த, வளர்ந்த ஊர் அனைத்துமே திருச்சி தான் அதனால் மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்..நாலு முனைப் போட்டி என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனித்து நிற்கிறோம், துணிந்து நிற்கிறோம். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியின் கூட்டணியுடன் இருக்கிறார்கள். கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியினுடைய வெற்றி உறுதி என தெரிவித்தார்.