கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. மக்களுக்காக துயரத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு இயேசு பிரான் உயிரை துறந்த துக்க நாள் இன்று. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மரணித்த நாளாக இருப்பினும் இதனை கிறிஸ்தவப் பெருமக்கள் புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.
இயேசு பிரானின் கடைசி உணவு உண்ட இரவு பெரிய வியாழன் என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. பெரிய வியாழனில் இருந்து துக்க காலம் தொடங்கி ஈஸ்டர் தினம் – அதாவது இயேசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் வரை நீடிக்கும். மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவின் வெளிப்பாடான நாளாக இருப்பதால் இதனை புனித வெள்ளி என்கின்றனர் கிறிஸ்தவப் பெருமக்கள்.
அதன்படி புனித வெள்ளி முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புனித ஜான் பிரிட்டோ தேவாலயத்தில் பங்குத்தந்தை ப்ரோமின் ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உடலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து கிறிஸ்தவ பெருமக்கள் ஏந்தியபடி தேவாலயத்தை சுற்றி ஊர்வலமாக சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். என்ன நிகழ்வில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.