மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குவதும், திருச்சி பெரிய கடை வீதியில் சிரித்த முகத்துடன் எழுந்தருளியுள்ள சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று இன்றையதினம் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் யாவும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பைரவநாதர், ஏனைய பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமானது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பைரவநாதருக்கு என மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் காட்சி தரும் பைரவநாதர் இழந்ததை மீட்டு தருவார், கடன் தொல்லை நீங்கும் என்பதால் இன்றைய தினம் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.