தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்ஐடி-டி) 61வது கல்வி நிறுவன தினம் மே, 3, 2024 அன்று பார்ன் ஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பதியில் அமையப்பெற்றுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் சத்யநாராயணா மற்றும் என்ஐடி திருச்சியின் இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.குமரேசன், டீன் (ஆசிரியர் நலன்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து முனைவர்.. ரமேஷ், டீன் (கல்வி), நடப்பு கல்வியாண்டில் என்ஐடி திருச்சிராப்பள்ளியின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை வழங்கினார். சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு சாதனை விருதுகள் மற்றும், சிறப்பாகச் செயல்பட்ட துறைக்கு சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த மாணவியாக. ஹர்ஷிதா, ஆர்.இ.சி. / என்ஐடி இன் முன்னாள் மாணவர்கள் சங்கமான RECAL – ஆல் கௌரவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு RECAL மூலம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. விழாவில் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையால் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.