பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த தேர்தலின் போது விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும்,
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது என்பதற்காகவும் போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு . அதனை நிறைவேற்றத்தை கண்டித்தும், விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமலும், உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று
ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வதும், இது ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சி அல்லவா.. விவசாயிகளுக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஓயாமெரி சுடுகாட்டில் விவசாயிகள் பிணம் போல் படுத்து கோஷங்கள் முழங்க போராட்டம் நடத்தினர்..