தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்பதற்காக ஆர்வமுடன் பள்ளியில் காத்திருந்த ஆசிரியர்கள் – 8 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை தரும் மாணவர்கள். பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது
அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளது.பள்ளிகள் வகுப்பறைகள் அனைத்தும் கடந்த வாரமே தூய்மை செய்யப்பட்டு மாணவிகளுக்கு இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கப்படும் இலவச புத்தகம் நோட்டு இன்றைய தினமே வழங்கப்பட்டது.