இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். இந்த தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்படும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் மாதம் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள், ஆண்டில் இரண்டு பெருநாள்கள், அதாவது இரண்டு முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். முதலாவது ரம்ஜான் திருநாள், இரண்டாவது பக்ரீத் என்று கூறப்படும் ஈகைத் திருநாள் ஆகும்.
ஈகைத் திருநாள் அன்று அனைவரையும் நேசிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்த படுகிறது. மேலும் நபி இப்ராஹிம் அவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்கள் தான் இந்த பெருநாளில் பல்வேறு நிகழ்வுகளிலும் ஹாஜ் பயணத்திலும் பிரதிபலிக்கிறது எனவே நபி இப்ராஹிம் அவர்களைப் போன்று கொள்கை உறுதியோடு வாழ்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் இந்த பெருநாளில் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்கின்றனர்.
அந்த வகையில் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முகமது மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பையாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.