திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஏலச்சீட்டு தீபாவளி பண்டு போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். மேலும் இவரை நம்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2000 முதல் 10 ஆயிரம் வரை ஏழு சீட்டு அவரிடம் கொடுத்து பணத்தை பெற்று வந்தனர் இந்நிலையில் அவர் கடந்த வருடம் இயற்கை எய்து விட்டார் அவர் வீட்டின் அருகே உள்ள பொதுமக்கள் சிலர் அவரிடம் கடந்த 20 வருடமாக சீட்டு பணம் செலுத்தி வந்திருந்தனர்.
கடந்த வருடம் அவர் திடீரென இறந்த நிலையில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு போட்ட பொதுமக்கள் இறந்த செல்வராஜ் மனைவியிடம் பணத்தை கேட்டதற்கு தருகிறேன் என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணத்தை தர முடியாது எனக் கூறி பணம் கேட்டவர்கள் மீது பொய் வழக்கு போட முயற்சித்துள்ளார் மேலும் பணத்தை திரும்பப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இறந்த செல்வராஜ் வீடு மற்றும் காம்ப்ளக்ஸ் என பல்வேறு முதலீடுகள் எங்களது பணம் மூலமாக சம்பாதித்துள்ளார். அதனை விற்று எங்கள் பணத்தை தருவதாக அவரது மனைவி வாக்குறுதி அளித்து தற்போது பணம் தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து பணத்தை இழந்தவர்கள் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தங்களின் பணத்தை மீட்டு தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.