திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக இன்று அளித்தனர். அதன்படி திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த சாமி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருச்சி துறையூர் மாராடி கோட்டை பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன் எனது மனைவி சுகன்யா இவருடன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வந்தேன் எங்களுக்கு ஒரு மகள் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூர் சென்று அவபோது ஊருக்கு வந்து கொண்டிருந்தேன் இந்நிலையில் எனது மனைவியுடன் சண்டை போட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இரண்டாவதாக எனது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது இதனால் நான் நீதிமன்றத்தில் விவகாரத்தை கேட்டு வழக்கு தொடர்ந்தேன். மேலும் என்னிடம் 15 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்ததாகவும் அதனை கலைக்க திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மேலும் கரு கலைப்புக்கு கணவராகிய எனது பெயரை பயன்படுத்தியுள்ளார் கடந்த எட்டு வருடங்களாக அவரிடம் பிரிந்து வாழும் நிலையில் எனது பெயரை தவறான முறையில் பயன்படுத்தி கரு கலப்பு செய்ய முயன்ற சுகன்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.