திருச்சி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் ட்ரேடர்ஸ் வெல்பர் அசோசியேசன் சார்பாக புதிதாக வணிக உரிமம் என்ற புது வரிச் சுமையை சுமத்துவதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் சங்கத் தலைவர் குணா, பொதுச் செயலாளர் வேல்முருகன் மற்றும் 100க்கு மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதிதாக வணிகவரி அறிவித்துள்ளனர் ஏற்கனவே ஜி எஸ் டி வரி, கடை வாடகை சொத்து வரி குடிநீர் வரி பாதாள சாக்கடை வரி தொழில் வழி தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட வரி மின் கட்டண உயர்வு போன்ற பல்வேறு வரி உயர்வு காரணமாக தொழில் நலிவடைந்து உள்ளது இந்நிலையில் இந்த புதிய வணிக உரிமம் என்ற புதிய வரி மேலும் தொழிலை பாதிக்கும் என கருத்தில் கொண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தனர். அதிகாரிகள் வியாபாரிடம் வியாபாரியிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அது மட்டும் அல்லாது தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தற்போது பயன்படுத்துவதில்லை ஆனாலும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் வியாபாரிகளிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர் இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கூறியுள்ளோம் ஆணையர் அதிகாரியிடம் இது குறித்து கேட்பதாக கூறியுள்ளார் மேலும் தொழில் வரி மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை எளிய முறையில் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய மாநகராட்சி தற்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தரைக்கடைகள் போடப்பட்டுள்ளது. தரைக் கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி பகுதிகளில் எங்கெல்லாம் தரைக்கடையில் அமைக்கலாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் தரைக்கடைகளை போடுவதற்காக அறிவுறுத்தி உள்ளோம் பெரிய கட்டிடங்கள் முன்பாகவும் தரை கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது இதற்கு ஒரு நல்ல தீர்வை மாநகராட்சி அதிகாரிகள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் காந்தி மார்க்கெட் நிச்சயமாக அதே இடத்தில் செயல்படும் ஸ்ரீரங்கம் உறையூர் ஆகிய இடங்களில் எப்படி மார்க்கெட் செயல்படுகிறது அதேபோல் காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் தொடர்ந்து நடைபெறும். போக்குவரத்துக்கு இடையில் உள்ளாமல் கனரக வாகனங்கள் பெரிய வாகனங்கள் மட்டும் பஞ்சபூர்ப பகுதியில் மாற்றுவது குறிப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் மேலும் காந்தி மார்க்கெட் மற்றகூடது என முதல்வர், அமைச்சர்களிடம் மன அளித்துள்ளோம் என தெரிவித்தார்.