திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு இடத்தில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட உள்ளது. இதுகுறித்து மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் செந்தில் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், போரில் உயிர் தியாகம் செய்த “படாலிக் மாவீரன்” மேஜர் சரவணனின் நினைவாக 24 மணி நேரம் பறக்கக்கூடிய 52 அடி உயர தேசிய கொடி கம்பம் தமிழக அரசின் அனுமதியுடன் மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை மூலம்

மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட், மேஜர் ஜெனரல் இந்திரபாலன் (ஓய்வு) முன்னாள் தலைமைத் தளபதி தக்ஷின் பாரத் உடன் இணைந்து மேஜர் சரவணனின் 52வது பிறந்தநாளையொட்டி, ஆகஸ்ட் 10, 2024 அன்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் ஆயுதப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையர், என்சிசி அதிகாரிகள் மற்றும் பிற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்