திருச்சி பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா தெரிவித்திருந்தார் இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பாஜக சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மேலும் ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தமிழக முழுவதும் பைக் ரேலி நடைபெற உள்ளது இதில் பாஜக மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களுக்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பாஜக திருச்சி மாவட்ட துணை தலைவர் ஜெய கர்ணா வெளியிரியது குறித்த கேள்விக்கு ? அவர் எதோ சூழ்நிலை காரணமாக வெளியே சென்று உள்ளார் மீண்டும் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்
மேலும் பாஜகவிற்கு வரக்கூடிய நபர்களுக்கு நல்ல ஊக்கமும் , அங்கீகாரம் கிடைக்கும் என்றார். வன்னியர்கள் இட ஒதுக்கீடுக்காக அன்புமணி போராடி வருகிறார் அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது அவர்கள் இது குறித்து சட்ட போராட்டம் நடத்தி வருகின்றார் நீதி மன்றம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றார். இராமலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது குறித்த கேள்விக்கு?அவர் கூறிய கருத்து தனிப்பட்ட கருத்து தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தது கிடையாது. காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் தமிழகம் என்ற வார்த்தையை 3 முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர் பாஜக 48 லட்சம் கோடி நிதி வழங்கி உள்ளது. நிதி ஆயோக் கோட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை அவர் கலந்து கொண்டு தேவையை கேட்டு இருக்க வேண்டும்தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக நிதி கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். நிதி கொடுப்பவர் தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீதாராமன் அவர் எப்படி தமிழகத்தை புறக்கணிப்பார் என கூறினார். இந்த பேட்டியின்போது பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.